யாழ். குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த வரலட்சுமி விரத பூசை இன்று வெள்ளிக்கிழமை (08.08.2025) பிற்பகல்-12.30 மணியளவில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
கெளரி அம்பாளுக்கு விசேட அபிஷேக, பூசைகள், மகாலட்சுமி விளக்குப் பூசை என்பன இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அடியார்களுக்குக் காப்புக்கட்டும் வைபவம் நடைபெறும்.