இணுவில் அறிவாலயத்தில் முழுநிலா சிறுவர் அரங்கம்

இணுவில் அறிவாலயத்தின் அனுசரணையில் முழுநிலா சிறுவர் அரங்கம் பௌர்ணமி நாளான இன்று வெள்ளிக்கிழமை (08.08.2025) மாலை-05 மணி முதல் இணுவில் அறிவாலய அரங்கில் இடம்பெறவுள்ளது.

மேற்படி நிகழ்வில் 2024 தேசிய நாடக விழாவில் ஏழு விருதுகளை வென்ற செம்முகம் ஆற்றுகைக் குழுவினரின் "எங்கே போனார் எலியார்?" எனும் சிறுவர் நாடகமும், நான்கு விருதுகளை வென்ற "எங்கே? எங்கே? குடை எங்கே?" எனும் சிறுவர் நாடகமும் ஆற்றுகை செய்யப்படவுள்ளன.

இதேவேளை, இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.