ஈழத்துச் சித்தர் நல்லூர் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வு வியாழக்கிழமை (14.08.2025) யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகிலுள்ள செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
நாளை காலை அபிஷேகம் ஆரம்பமாகி காலை-09 மணி தொடக்கம் திருமுறை, நற்சிந்தனைப் பாடல்களைத் தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் 'நல்லூர்த் தேரடி' எனும் தலைப்பில் ஓய்வுநிலை அதிபர் ஆ.சிவநாதன் உரையாற்றுவார்.