ஈழத்துச் சித்தர் நல்லூர் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வு நாளை வியாழக்கிழமை (11.09.2025) யாழ் நல்லூரில் அமைந்துள்ள செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.
நாளை காலை அபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து காலை-09 மணி முதல் திருமுறை, நற்சிந்தனைப் பாடல்களைத் தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் ' நாவலர் பெருமான் ' எனும் தலைப்பில் ஆசிரியர் சொல்வேந்தன் செ.சிறி ஆதவன் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்..png)
