நவராத்திரியை முன்னிட்டுச் சிவகுரு ஆதினத்தில் ஆன்மீக உரை

நவராத்திரி விரதத்தை முன்னிட்டுச் சிவகுரு ஆதீனத்தில் ஆன்மீக உரை நிகழ்வு நாளை திங்கட்கிழமையிலிருந்து (22.09.2025) அடுத்த மாதம்-01 ஆம் திகதி புதன்கிழமை வரையான பத்து நாட்களும் தினமும் மாலை-06 மணி முதல் மாலை-06.30 மணி வரை நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீன மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

நவராத்திரியின் முதலாம் நாளான நாளை சோம்பல் வருவது ஏன்? எனும் தலைப்பில் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள் உரையாற்றவுள்ளார்.