மல்லாகத்தைச் சேர்ந்த பொது அமைப்புக்களில் நிர்வாகிகளாகச் சிறப்பாகச் சேவையாற்றியவர்கள் மற்றும் கிராமத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (21.09.2025) மாலை-05 மணி முதல் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக அமைந்துள்ள தனியார் காணியில் நடைபெறவுள்ளது.
பொறியியலாளர் தனராஜா ஜெனி நெல்சன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் தெல்லிப்பழை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.செல்வக்குமாரி நேசரட்ணம் பிரதம விருந்தினராகவும், ஜே-214 கிராம அலுவலர் திருமதி. அமலதாஸ் விஜிதா, ஜே-213 கிராம அலுவலர் சிவபாதம் சுமந்திரன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.