வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் மஹாளய பட்சத் திதி இறுதிநாளை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (21.09.2025) காலை-09 மணியளவிலும், நண்பகல்-12 மணியளவிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளது.
பிதிர்த் தர்ப்பணம் செய்ய விரும்புபவர்கள் ஆலயக் காரியாலயத்தில் தொடர்பு கொள்ளுமாறு ஆலய ஆதீன கர்த்தா சிவஸ்ரீ ந.ரங்கநாதக் குருக்கள் தெரிவித்துள்ளார்.