மூத்த சுயாதீன ஊடகவியலாளரும், எழுத்தாளருமான கணபதி சர்வானந்தா எழுதிய " இவர்கள் மகாத்மாக்கள் " நூலின் அறிமுக விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (14.09.2025) மாலை-05 மணி முதல் இணுவில் அறிவாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் வ.மகேஸ்வரன் தலைமை யில் இடம்பெறவுள்ள நிகழ்வு செல்வி காருண்யா புஷ்கரனின் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகும். ஆசிரியர் யோ.சுதந்திரன் வரவேற்புரை ஆற்றுவார். சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு திருமுருகன் ஆசி உரையையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் முகாமைத்துவக் கற்கைகள் பீடாதிபதி பேராசிரியர் க.தேவராஜா வாழ்த்துரையும் நிகழ்த்துவர்.
டில்லிப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவன் ஐ.வி.மகாசேனனின் அறிமுக உரையைத் தொடர்ந்து கலாபூஷணம் பண்டிதை.திருமதி.வைகுந்தம் கணேச பிள்ளைக்குச் சிறப்புப் பிரதி வழங்கப்படும். உதயன் பத்திரிகையின் ஆசிரியர் த.பிரபாகரன் மற்றும் உளவளத் துணையாளர் நா.நவராஜ் ஆகியோர் நூல் தொடர்பான கருத்துரைகளை ஆற்றுவார். தொடர்ந்து நூலாசிரியர் ஏற்புரை நிகழ்த்துவார்.
உளவள மருத்துவ சேவையாளர் ந.ஞானசூரியர் நிகழ்வை முன்னிலைப்படுத்துவார். கவிஞர் நாக.சிவசிதம்பரம் நன்றி உரையாற்றுவார்.