வரலாற்றுச் சிறப்பு மிக்க பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலய ஆவணி மஹோற்சவப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா கிருஷ்ண ஜெயந்தி நன்னாளான நாளை சனிக்கிழமை (13.09.2025) வெகுசிறப்பாக இடம்பெறவுள்ளது.
நாளை காலை-09.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து முற்பகல்-11.30 மணியளவில் வரதராஜப் பெருமாள் சித்திரத் தேரில் ஆரோகணித்து அதனைத் தொடர்ந்து சித்திரத் தேர்ப் பவனி ஆரம்பமாகுமென ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.