இறுதி யுத்தத்தில் காலை இழந்தவருக்குப் புதிய மூன்று சில்லுச் சைக்கிள்!

இறுதி யுத்தத்தில் காலை இழந்த முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த தி.அமுததாசன் என்பவருக்குப் புதிய மூன்று சில்லுச் சைக்கிள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் கொடையாளர் ஜெயமாறன் லோஜினி தம்பதிகளின் 24 ஆவது திருமண நாளை முன்னிட்டு அவர்களின் முழுமையான நிதிப் பங்களிப்பில் கனக செல்லா அறக்கட்டளை மன்றம் ஊடாக மேற்படி புதிய மூன்று சில்லுச் சைக்கிள் நேரடியாக வழங்கி வைக்கப்பட்டது.