நல்லூரில் செல்லப்பா சுவாமிகளின் குருபூசை

ஈழத்துச் சித்தர் நல்லூர் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (11.09.2025) நல்லூரில் அமைந்துள்ள  செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

சைவப்பிரகாசப் பேரவையின் செயலாளர் வேலுப்பிள்ளை சிவகுருநாதன் தலைமையில் காலை-09 மணியளவில் திருமுறை, நற்சிந்தனைப் பாடல்களைத் தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் ' நல்லைநகர்  நாவலர் பெருமான் ' எனும் தலைப்பில் ஆசிரியர் சொல்வேந்தன் செ.சிறி ஆதவன் கலந்து கொண்டு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து குருபூசை வழிபாடுகளும் இடம்பெற்றன. 

மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களுக்கு அண்மையில் சைவப்பிரகாசப் பேரவையினரால் தொகுத்து வெளியிடப்பட்ட கந்தபுராணம் நூல் வழங்கி வைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.