யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இணைந்து தியாகதீபம் திலீபன் நினைவாக ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம் நிகழ்வு இன்று புதன்கிழமை (24.09.2025) காலை-09 மணி முதல் மாலை-03 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
" உயிர் கொடுத்த உத்தமனுக்காய் உதிரம் கொடுப்போம்" எனும் தொனிப் பொருளில் இடம்பெறவுள்ள மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் தவறாது கலந்து கொண்டு பங்களிப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.