பலஸ்தீனத்தை தனி அரசாக ஏற்றுக் கொள்ளும் நாடுகளில் இலங்கை உள்ளிட்ட 151 நாடுகள் காணப்படுவதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்வரும்-29 ஆம் திகதி வரை பொது விவாதம் இடம்பெறுகின்றது. இந்த அமர்வில் இலங்கை, இந்தியா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட 151 நாடுகள் பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிக்கவுள்ளன. எனினும், இஸ்ரேல், அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், கேமரூன், ஹங்கேரி மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிக்க மறுத்துள்ளன.