சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஞானச்சுடர் சஞ்சிகையின் 332 ஆவது ஆவணி மாத இதழ் வெளியீட்டு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (19.09.2025) முற்பகல்-10.30 மணி முதல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் சைவப்புலவர் பொன்.சந்திரவேல் மலரின் வெளியீட்டுரையையும், ஓய்வுநிலை அதிபர் இரா.ஶ்ரீநடராசா மலரின் மதிப்பீட்டுரையையும் நிகழ்த்தவுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்படும்.
.png)
