தற்கொலை உலகளவில் மிகப்பெரிய பொதுச் சுகாதாரச் சவாலாக உள்ளது. தற்கொலைத் தடுப்பு என்பது மருத்துவர், உளவியல் நிபுணர் மட்டுமல்லாது குடும்பம், சமூக அமைப்புக்கள், அரசு அனைத்தும் இணைந்து செய்ய வேண்டிய பணியாகும். பாரம்பரியச் சிகிச்சையும், நவீன உளவியல் முறைகளும் இணைந்து செயல்பட்டால் எங்கள் சமூகத்திற்கு ஏற்ற பயனுள்ள முழுமையான தற்கொலைத் தடுப்பு மாதிரி உருவாகும். வாழ்க்கை ஒரு அரிய வரம். அதை மதித்துக் காப்போம் என அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இன்று புதன்கிழமை (10.09.2025) உலகத் தற்கொலைத் தடுப்பு நாளை முன்னிட்டு அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தினர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உலக சுகாதார நிறுவனம் 2021 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள தகவலின்படி ஒவ்வொரு ஆண்டும் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்கிறார்கள். குறிப்பாக 15 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டோருக்குத் தற்கொலை முக்கியமான மரணக் காரணங்களில் ஒன்றாக உள்ளது.
தற்கொலை என்பது ஒரே காரணத்தால் ஏற்படும் செயல் அல்ல. அது மனவியல், சமூக, கலாச்சாரம் மற்றும் உடலியல் காரணிகளின் கூட்டு விளைவு. உலகளவில் தற்கொலை மரணங்கள் மொத்த மரணங்களில் 1.3 சதவீதமாக உள்ளன. தென் ஆசியாவில், குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கையில் உலகின் மிக உயர்ந்த தற்கொலை விகிதங்கள் பதிவாகியுள்ளன.
தற்கொலைத் தடுப்பு என்பது உடல், மனம், ஆன்மா ஆகியவற்றைக் கவனிக்கும் முழுமையான பராமரிப்பும், உளவியல் ஆதரவு வழங்கும் அறிவியல் வழிமுறைகளும் தேவைப்படுகிற ஒரு துறையாகும்.
மனச்சோர்வு, இருமுனை நோய், அச்சக் கோளாறு, போதைப்பொருள் அல்லது மதுபானப் பழக்கம், நீண்டநாள் நோய்கள், வலி, உடல் ஊனங்கள்,சமூக மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள், குடும்பப் பிரச்சினைகள், திருமண முறிவு, குடும்ப வன்முறை, வேலை இழப்பு, கடன், பொருளாதார அழுத்தம், கல்விச் சுமை மற்றும் இளமைக் குழப்பங்கள், தனிமை, சமூக அங்கீகாரம் இல்லாமை ஆகியன தற்கொலைக்கான சில காரணிகளாகும்
“எனக்கு வாழ வேண்டிய அவசியமில்லை” போன்ற வாய் உச்சரிப்புக்கள், சமூகத்திலிருந்து விலகி நடந்து கொள்வது, திடீர் கோபம் அல்லது மனச் சோர்வு, மதிப்புள்ள பொருட்களைப் பிறருக்குக் கொடுத்து விடுதல், தூக்கம் அல்லது உணவுப் பழக்கங்களில் மாற்றங்கள் என்பவற்றைப் பொதுவாக அவதானிக்க முடியும் எனவும் அண்டத்தை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.