கோண்டாவில் அற்புதநர்த்தன விநாயகரின் மண்டலாபிஷேகப் பூர்த்தியும் 1008 சங்காபிஷேகமும்

கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் ஆலய மண்டலாபிஷேகப் பூர்த்தியும் 1008 சங்காபிஷேகமும் புதன்கிழமை (15.10.2025) சிறப்பாக இடம்பெறவுள்ளது.

நாளை காலை-07 மணிக்கு அபிஷேகம், பூஜை, 1008 சங்காபிஷேக  வழிபாடுகள் ஆரம்பமாகி மதியம்-12 மணியளவில் மகேஸ்வர பூஜை (அன்னதானம்) இடம்பெறும். நாளை மாலை-05 மணியளவில் ஊஞ்சற் பாட்டு இடம்பெற்று அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமான் வெளிவீதி உலா வரும் திருக்காட்சி இடம்பெறும்.