ஒவ்வொரு வருடமும் ஒக்ரோபர் மாதம்-15 ஆம் திகதி சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (12.10.2025) முற்பகல் யாழ் கல்வியங்காடு மூன்றாம் கட்டையிலுள்ள கருவி நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் அலகு வளாகத்தில் கருவி நிறுவனத்தின் தலைவர் க.சர்வானந்தா தலைமையில் வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் தீவகம் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் கருவி நிறுவனத்தைச் சேர்ந்த 20 பயனாளிகளுக்குப் புதிய வெள்ளைப் பிரம்பு மற்றும் அன்பளிப்புக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.