மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பாகவும், மாகாணத்திற்கான அதிகாரங்களை முழுமையாகவும், முறையாகவும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒரு ஐக்கியப்பட்ட நிலையை உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை (15.10.2025) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் தவிர்க்கமுடியாத காரணத்தால் குறித்த கலந்துரையாடலில் சமூகமளிக்க முடியாத நிலையில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.