நல்லூரில் ஏடு தொடக்கல் நிகழ்வு

ஏடு தொடக்கல் நிகழ்வும் சிறுவர் வகுப்புக்களுக்குப் புதிய மாணவர்களை இணைத்தலும் விஜயதசமி நன்னாளான நாளை வியாழக்கிழமை (02.10.2025) முற்பகல்-10 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் நடைபெறவுள்ளது.

சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள் கலந்து கொண்டு ஏடு தொடக்கி வைப்பார். அத்துடன் சிறுவர் வகுப்பு மற்றும் ஆன்மீக வகுப்புக்களுக்குப்  புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். தங்கள் பிள்ளைகளுக்கு ஏடு துவக்க விரும்புவோர் மற்றும் வகுப்புக்களில் இணைய விரும்புவோர் சிவகுரு ஆதீன அலுவலகத்தின் 0772220103 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள் கேட்டுள்ளார்.