சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக ஞானச்சுடர் சஞ்சிகையின் 333 ஆவது புரட்டாதி மாத இதழ் வெளியீட்டு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (10.10.2025) முற்பகல்-10.30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் ஊடகவியலாளர் த.காண்டீபன் வெளியீட்டுரையையும், யாழ்ப்பாணக் கல்லூரி ஆசிரியர் துரை கணேசமூர்த்தி மலரின் மதிப்பீட்டுரையையும் ஆற்றவுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்படும்.