பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவத்தின் கப்பல் திருவிழா புதன்கிழமை (08.10.2025) அதிகாலை மிகவும் சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.
அதிகாலை-02.30 மணியளவில் வசந்தமண்டபப் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து நாகேஸ்வரப் பெருமான், விநாயகப் பெருமான், வள்ளி- தெய்வயானை சமேத முருகப் பெருமான் ஆகிய முத் தெய்வங்களும் வெளிவீதி உலா வந்து அதனைத் தொடர்ந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க கப்பலாட்டும் வைபவம் நடந்தேறியது.