ஏழாலை புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை (11.10.2025) பிற்பகல்-01 மணியளவில் பாடசாலையின் அமரர்கள்.செளந்தரநாயகம் ஆனந்தராணி ஞாபகார்த்த திறந்தவெளி அரங்கில் அரங்கில் பாடசாலை அதிபர் திருமதி.சந்திரலதா கனேந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் வலிகாமம் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம் மற்றும் பொது முகாமைத்துவம்) ஆனந்த ஜெயேந்திரன் சஞ்ஜீவன் பிரதம விருந்தினராகவும், உடுவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சோமசுந்தரம் இராமநாதன், ஓய்வுநிலை அதிபர் சிவசாமி நல்லகுமார், நோர்வேயைச் சேர்ந்த இருதய சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர். சண்முகநாதன் விமலநாதன், ஓய்வுநிலை முன்பள்ளி ஆசிரியை திருமதி.அரியமலர் சூசைதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், ஏழாலை நலன்புரிச் சங்கப் பிரித்தானியாக் கிளையின் உபதலைவர் நல்லதம்பி சற்குணநாதன் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
ஏழாலை புனித இசிதோர் தேவாலயப் பங்குத் தந்தை அருட்பணி மைக்கல் முத்து நிக்சன் கொலின் ஆசி உரையையும், ஓய்வுநிலை ஆசிரியர் குமாரசுவாமி கேதீஸ்வரன் நினைவுப் பேருரையையும் ஆற்றுவர்.