சுமார் ஐந்து கிலோ மீற்றர் நீளமான புங்குடுதீவு வாணர் தாம்போதி கடற்பாலம் இரு மருங்கும் மோசமாகச் சேதமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புங்குடுதீவுக்கு மாத்திரமன்றி நயினாதீவு, நெடுந்தீவுப் பிரதேசங்களுக்கும் ஒரேயொரு தரைப் பயண மார்க்கமாக காணப்படுகின்ற குறித்த பாலத்தின் வீதியால் வருடாந்தம் லட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. பாலத்தின் வீதி கடந்த வருடம் மேமாதம் காப்பெற் இடப்பட்டு நல்ல நிலையில் காணப்படுகின்ற போதும் வீதியின் இரு மருங்கும் மோசமாகச் சேதமடைந்து வருகின்றன.
மாரிகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை விரைவாகப் புங்குடுதீவு வாணர் தாம்போதி கடற்பாலத்தின் இரு மருங்கையும் திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் வீதியையும் பாதுகாத்து மேலதிக செலவையும் தடுக்க முடியுமெனத் தீவகம் சிவில் சமூகம் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.