நல்லூரிலிருந்து கதிர்காமத்துக்குப் புனித தரிசன யாத்திரை

ஜப்பசி மாதக் கார்த்திகை விரதத்தை முன்னிட்டு இலங்கையில் சமாதானம் நிலைபெற வேண்டி இலங்கை முதலுதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயம் நோக்கிய வேல்தாங்கிய புனித திருத்தலத் தரிசன யாத்திரை எதிர்வரும்-31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-06 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த தரிசன யாத்திரை அடுத்த மாதம்-02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கதிர்காமக் கந்தன் ஆலயத்தைச் சென்றடையவுள்ளது. 

தரிசன யாத்திரையில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் எதிர்வரும்- 20 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முன்னர் 0779236552 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவினை மேற்கொண்டு வரவினை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை முதல் உதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபையின் தேசிய ஆணையாளர் வை.மோகனதாஸ் கேட்டுள்ளார்.