கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும்-09 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு-12 மணியுடன் நிறைவடையுமென இலங்கைப் பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம்- 18 ஆம் திகதி முதல் ஒன்லைனில் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந் நிலையில் 09 ஆம் திகதி நள்ளிரவு-12 மணியுடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைகின்றது. எந்தக் காரணத்துக்காகவும் கால அவகாசம் நீடிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொள்ள முடியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 0112784208 / 0112784537/0112785922 / 0112784422