நல்லூர் பிரதேச செயலக ஓய்வூதியக் கிளை நடாத்தும் தேசிய ஓய்வூதியர் தின நிகழ்வு-2025 இன்று வியாழக்கிழமை (09.10.2025) முற்பகல்-10 மணியளவில் நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
மேற்படி நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி.யசோதா உதயகுமார் பிரதம விருந்தினராகவும், நல்லூர்ப் பிரதேச செயலகக் கணக்காளர் திருமதி.தர்மாம்பிகை ஆனந்தகிருஷ்ணன், நல்லூர் பிரிவு பகிரங்க ஓய்வூதிய நம்பிக்கை நிதியத் தலைவர் சு.மோகனதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந் நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் கலந்து கொண்டு விசேட கருத்துரை ஆற்றுவார்.
இதேவேளை, குறித்த நிகழ்வில் அனைத்து ஓய்வூதியர்களையும் தவறாது சமூகமளிக்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.