இணுவில் அறிவாலயத்தின் ஏற்பாட்டில் பெரிய பிரித்தானியா அறிவு அறக்கட்டளையின் அனுசரணையில் முழுநிலாக் கலையரங்கம் நிகழ்வு இன்று புதன்கிழமை (05.11.2025) மாலை-05 மணியளவில் இணுவில் அறிவாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் சிறுவர்கள் பங்குகொள்ளும் சிறப்புப் பண்ணிசைப் பாடல்கள் மற்றும் கதாப் பிரசங்க நிகழ்வுகள் இடம்பெறும். அத்துடன் விருது பெற்றவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும், செம்முகம் ஆற்றுகைக் குழுவின் 'தேவை' குறுநாடகம் நிகழ்வும் இடம்பெறும்.
இதேவேளை, இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.,

