நல்லூர் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருபூஜை நிகழ்வு இன்று புதன்கிழமை (05.11.2025) நல்லூரிலுள்ள செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
அபிஷேக வழிபாடுகளைத் தொடர்ந்து காலை-09 மணியளவில் திருமுறை, நற்சிந்தனைப் பாடல்கள் ஓதுதல் நடைபெறும். அதனைத் தொடர்ந்து முற்பகல்-10 மணியளவில் வலிகாமம் வலய ஓய்வுநிலைப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சைவப்புலவர் சு.தேவமனோகரன் ' நோய் நீக்கம்' எனும் தலைப்பில் உரை நிகழ்த்துவார். அதனைத் தொடர்ந்து குருபூஜை வழிபாடுகளும் இடம்பெறும்.

