தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரியும், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்குமாறு வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொது மக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04.11.2025) மாலை-04 மணியளவில் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் ஆரம்பமாகி மாலை-06 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.
நேற்றைய போராட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான க.சுகாஷ், கட்சியின் பிரச்சாரச் செயலாளரும், சட்டத்தரணியுமான ந.காண்டீபன், கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் பொன் மாஸ்ரர், உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பெளர்ணமி நாளான இன்று புதன்கிழமை (05.11.2025) காலை-06 மணி தொடக்கம் மாலை-06 மணி வரை தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் தொடர் போராட்டம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இன்றைய தொடர் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

