சுன்னாகம் பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாதப் பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை (07.11.2025) பிற்பகல்- 02.30 மணியளவில் சுன்னாகம் பொது நூலக மண்டபத்தில் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் சுன்னாகம் உப அலுவலகப் பொறுப்பதிகாரி திருமதி.கெளரி விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ் பிரதம விருந்தினராகவும், யாழ். சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாசாலையின் அதிபர் திருமதி. லதாவதி பத்மநாதன் சிறப்பு விருந்தினராகவும் , வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் அழகேசன் பிரதீபன் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

