தமிழ்மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் துணிச்சல் மிகுந்த சேவைகள் ஆற்றி இந்த வருடம் நீதிச் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனைக் கௌரவிக்கும் வகையில் பிரித்தானியா வாழ் வேலணைப் பாடசாலைகளின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சேவைநலன் பாராட்டு விழா இன்று சனிக்கிழமை (01.11.2025) லண்டனில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
மூத்த ஊட கவியலாளர் இளையதம்பி தயானந்தா தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில் லண்டன் பிறேன்ட் மாநகர முதல்வர் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.

