2025 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடாத்துவதற்கு எதிர்வரும்-04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும்-10 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம்-05 ஆம் திகதி நிறைவுபெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

