அண்மையில் வெளியாகிய கலைமுகம் கலை இலக்கியச் சமூக இதழின் அமுத மலர் தொடர்பான உரையாடல் அரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (14.12.2025) மாலை-03 மணியளவில் இல-286,பிரதான வீதி,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூதுக் கலையகத்தில் நடைபெறவுள்ளது. நா.நவராஜ் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் அமுத மலரில் வெளிவந்த சிறுகதைகள் பற்றி ரக் ஷானா ஷரிபுத்தீன்,சி.விமலன் ஆகியோரும், நேர்காணல்,பத்தி பற்றி சி.ரகுராமும், கட்டுரைகள் பற்றி ந.குகபரன்,தி.செல்வமனோகரன் ஆகியோரும்,கவிதைகள் பற்றி சு.குணேஸ்வரனும் உரையாற்றவுள்ளனர். இதன்போது சிறப்புரையை ' வாசிப்பு எனும் அசைவியக்கம்-பயிற்சிப் புத்தகப் பண்பாட்டில் கலை இலக்கியச் சஞ்சிகைகள்' எனும் பொருளில் பா.அகிலன் வழங்கவுள்ளார்.
இதேவேளை, இந் நிகழ்வில் கலைமுகம் இதழின் வாசகர்கள்,படைப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

