இணுவில் கலை இலக்கிய வட்டத்தின் 45 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் ஜீவநதி சஞ்சிகையின் 267 ஆவது இதழ் அறிமுகமும் கவிஞர். கந்தையா ஸ்ரீகணேசன் எழுதிய தேடிய தேட்டங்கள் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடும் இன்று புதன்கிழமை (04.02.2026) மாலை-03 மணி முதல் இணுவில் மஞ்சத்தடி அருணகிரிநாதர் சிவசுப்பிரமணியர் மண்டபத்தில் வாழ்நாள் பேராசிரியர். வல்லிபுரம் மகேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர், கலாநிதி ஆறு. திருமுருகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி (பதில்) கலாநிதி கி. சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரைகளை ஆற்றுவர்.
கலை, இலக்கிய விமர்சகரும், ஆசிரியருமான சி.ரமேஸ் கவிதைத் தொகுப்பின் நூல் வெளியீட்டுரையையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஈஸ்வரநாதபிள்ளை குமரன் நூல் அறிமுக உரையையும் ஆற்றுவர்.கலை, இலக்கிய விமர்சகரும், ஆசிரியருமான ந.குகபரன் நூல் மதிப்பீட்டுரையை நிகழ்த்துவார்.
இதேவேளை, இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

