மே-18 முள்ளிவாய்க்கால் நினைவுநாளை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (08.05.2026) காலை-09 மணி முதல் மாலை-04 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.
திட்டமிட்ட இனப் படுகொலையால் தம் இன்னுயிர்களை இழந்த உயிர்களை நினைந்து அனைவரையும் உதிரம் கொடுக்க முன்வருமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

