இணுவிலில் சிறப்பிக்கப்படவுள்ள சித்திரைப் புத்தாண்டு சிறப்பு இசை அரங்கு

இணுவில் அறிவாலயத்தின் ஏற்பாட்டில் வருடாந்தச் சித்திரைப் புத்தாண்டு சிறப்பு இசை அரங்கு நிகழ்வு இன்று சனிக்கிழமை (09.05.2026) மாலை-05 மணியளவில் இணுவில் அறிவாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

மேற்படி நிகழ்வில் தொழிலதிபர் த. கந்தசாமி பிரதம விருந்தினராகவும், பெரிய பிரித்தானியாவிலுள்ள அறிவு அறக்கட்டளை நிறுவுனர் பதஞ்சலி நவேந்திரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இணுவையூர் அழகேசன் மைந்தர்களான அ. அமிர்தலோஜனன், அ. அமிர்த சிந்துஜன் ஆகியோரின் குரலிசையில் இடம்பெறும் இசை நிகழ்வில் அணி சேர் கலைஞர்களாக கே.வேலதீபன்,  நா. சிவசுந்தரசர்மா, க.கஜன்,  சீ.செந்தூரன், கு ரவிசங்கர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.  

இதேவேளை, இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு இணுவில் அறிவாலயத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.