போரதீவுப்பற்று மக்களுடன் கஜேந்திரகுமார் எம்பி திடீர் சந்திப்பு

மட்டக்களப்பு போரதீவுப்பற்று மக்களுடன் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று சனிக்கிழமை (09.05.2026) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.  

இதன்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகக் கேட்டறிந்த அவர் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாகவும் கலந்துரையாடினார். 

இந்தச் சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் ஆகியோரும் உடனிருந்தனர்.