கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விரத உற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயப் பிரதோஷ விரத உற்சவம் இன்று வியாழக்கிழமை (14.05.2026) மாலை பக்திபூர்வமாக இடம்பெறவுள்ளது.  

இன்று மாலை-04 மணியளவில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் ஆரம்பமாகிப் பூஜை வழிபாடுகள், வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் உள்வீதி உலா வரும் திருக்காட்சி நடைபெறும்.