இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள மகிந்த!

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (12.05.2026) முன்னிலையாகுவேன். அழைக்கப்படும் சகல விசாரணைகளுக்கும் செல்வேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  

ஸ்ரீ லங்கா விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவின் பூதலுடலுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.