உலகெங்கும் காதலர் தினம், தொழிலாளர் தினம், சிறுவர் தினம் என்று எத்தனையோ தினங்கள் கொண்டாடப்படுகின்றன. ஆனால், அத்தனையிலும் புனிதமானதாக கருதக் கூடிய தினம் 'அன்னையர் தினம்' மாத்திரம் தான். அப்படிப்பட்ட அன்னை வழங்கும் அன்புக்கு அளவு ஏது? விலை ஏது?
ஒரு சகோதரியாக, தாயாக, தோழியாக, இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்துபவராக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச் செல்லும் முன்னோடியாக இப்படி அனைத்துமாய் இருப்பவள் தாய்.
ஒரு பெண் தனது வாழ்நாளில் எத்தனையோ நிலைகளைக் கடந்து வந்தாலும் 'அன்னை' என்கிற பாத்திரம் தான் மிகவும் உன்னதமான இடத்தை வகிக்கிறது.
அம்மாவின் அன்பு தான் வாழ்க்கையின் முதல் ஆசிர்வாதம்!, அம்மாவின் அன்பு தான் வாழ்க்கையில் கிடைத்த மிகச் சிறந்த பரிசு!, அம்மா எனும் ஒற்றைச் சொல்லே அகிலம் முழுவதும் ஆள்கிறது!
உயிர் தந்து உலகைக் காட்டிய அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.....

