யாழில் இன்று மறுபார்வை – 01 அரசியல் கருத்துரையும் கலந்துரையாடலும்

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் மறுபார்வை – 01 அரசியல் கருத்துரையும் கலந்துரையாடலும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (18.10.2026) காலை-09.30 மணி தொடக்கம் பிற்பகல்-12.30 மணி வரை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் இடம்பெறவுள்ளது.    

மேற்படி நிகழ்வில் அரசியல் ஆய்வாளர் ம. நிலாந்தன், மூத்த பத்திரிகையாளர் அ. நிக்ஸன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு கருத்துரைகள் நிகழ்த்துவர். தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெறும். 

இதேவேளை, குறித்த நிகழ்வில் புதிய பார்வைகளைப் பெறவும், கருத்துப் பரிமாற்றத்தில் பங்கேற்கவும் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.