பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மீண்டும் இரத்த தட்டுப்பாடு!

 


தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்தத்தின் இருப்பு மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக அவசர சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குத் தேவையான இரத்தத்தை வழங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

எனவே, ஆர்வமுள்ள அனைவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிக்கு நேரில் வருகை தந்து இரத்ததானம் செய்யுமாறு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.