உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலயக் கற்பக விநாயகர் அறநெறிப் பாடசாலைச் சிறார்களின் வாணி விழா நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை (17.10.2026) மாலை-03.30 மணியளவில் உரும்பிராய் கற்பக விநாயகர் மணிமண்டபத்தில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலயப் பரிபாலன சபைத் தலைவர் சிவஞானம் சிவராம் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளர் நவரத்தினம் பரந்தாமன் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.
இதேவேளை, இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


