உயர்நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுத் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசாரதேரருக்கு ஆதரவாக கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகள் உள்ளிட்ட 54 பேர்கள் இன்று (16.10.2026)கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்ற உத்தரவு தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்குப் பொலிஸார் அறிவித்த போதிலும் அதனை மீறி அவர்கள் அங்கிருந்துள்ளனர். இந் நிலையில் போராட்ட இடத்துக்குப் பொலிஸாருடன் பஸ்கள் வந்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோர் தமது போராட்டத்தை முடித்துக் கொண்டு தாம் அமைத்திருந்த தற்காலிக கொட்டகைகளை அகற்றிக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.



