குற்றவாளி ஞானசார தேரருக்கு ஆதரவாகப் போராடும் பிக்குகளுக்கு சிக்கல்!

ஜனாதிபதி செயலகம் உயர் பாதுகாப்பு வலயமாகக் காணப்படுவதால் செயலகம் முன்பாக எந்தவொரு நபரும் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடை செய்யும் உத்தரவைக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திடமிருந்து பொலிஸார் பெற்றுள்ளனர்.

இந் நிலையில் உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேர் ஜனாதிபதி செயலக வளாகத்துக்குள் அல்லது அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தங்கியிருப்பதையும், போராட்டம் நடத்துவதையும் தடுக்கும் உத்தரவைக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16.10.2026) பிறப்பித்துள்ளது. 

வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுச் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பௌத்த தேரர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று காலை வரையிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.