ஞானச்சுடர் ஐப்பசி மாத மலர் வெளியீடு

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஞானச்சுடர் சஞ்சிகையின் ஐப்பசி மாத 346 ஆவது மலர் வெளியீட்டு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (30.10.2026) முற்பகல்-10.30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெறவுள்ளது. 

இந் நிகழ்வில் சமாதான நீதவான் ஐ.கோ.சந்திரசேகரம் மலரின் வெளியீட்டுரையையும், ஆசிரியர் சொல்லின் செல்வர்- இரா.செல்வவடிவேல்  மலரின் மதிப்பீட்டுரையையும் ஆற்றவுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்படவுள்ளது.