2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
விசாரணை நிறைவில் குறித்த பரீட்சையை மீண்டும் நடத்துவதா?இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்