சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றம் 2024/2025 தொடர்பாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவிற்கும் இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை (27.05.2025) நடைபெற்ற கலந்துரையாடலுக்கு அமைய நியாயமான காரணங்களை உடைய ஆசிரியர்களின் இடமாற்றங்களை இலங்கை ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து பரிசீலிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
எனவே, நியாயமான காரணங்களை உடைய ஆசிரியர்களின் மேன்முறையீடுகளைத் தமக்கு விரைவாக கிடைக்கச் செய்யுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மாகாண இடமாற்ற சபை உறுப்பினர் சோ. காண்டீபராசா கேட்டுள்ளார். மேலதிக தகவல்களுக்கு 0773644067 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.