யாழ்.பல்கலைக்கழகத்தில் வாணி விழாவும் துறைத் தினமும்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடக் கல்வியியல் துறையினரின் ஏற்பாட்டில் வாணி விழாவும் துறைத் தினமும் விஜயதசமி நாளான இன்று செவ்வாய்க்கிழமை (20.10.2026)  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல்துறை மண்டபத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவர் பேராசிரியர். ஆ.நித்திலவர்ணன் தலைமையில் நடைபெறவுள்ளது.  

இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், சிரேஷ்ட பேராசிரியருமான தி.வேல்நம்பி பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர்.நாகமுத்து பிரதீபராஜா சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்வர்.

இன்று காலை-09 மணியளவில் பொங்கல் வழிபாடுகள் ஆரம்பமாகிப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நண்பகல்-12 மணியளவில் அரங்க நிகழ்வுகள் நடைபெறும்.