மீண்டும் அதிகரித்த கோதுமை மா விலை!

ஒரு கிலோக் கிராம் கோதுமை மாவின் விலை இன்று (20.10.2026) முதல் 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோதுமை மா இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ளனர்.  

கடந்த மாத இறுதியிலும் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.  

இதேவேளை, கோதுமை மா விலை அதிகரிப்பைத் தொடர்ந்து  பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளிலும் அதிகரிப்பு ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது குறித்து நாளையே முடிவெடுக்கப்படுமென அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தினர்  தெரிவித்துள்ளனர்.